![]() |
| 09, 10 SEPTEMBER - 2018 CURRENT AFFAIRS |
உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தி லான்சட் என்ற மருத்து இதழில் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. உலகளவில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டு மக்கள்தான் அதிகம் சுறுசுறுப்பானவர்கள். அங்குள்ள மக்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே போதுமான அளவில் உடற்பயிற்சியில்லாமல், சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறார்கள். கடைசி இடத்தில் வளைகுடா நாடான குவைத் நாட்டு மக்கள்தான் சுறுசுறுப்பற்றவர்கள், சோம்பேறிகள். இந்த நாட்டு மக்களில் 67 சதவீதம் பேர், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதில் இந்தியா 117-வது இடத்தில் உள்ளது.இந்திய மக்கள் தொகையில் 34 சதவீத மக்களுக்குச் சுறுசுறுப்பு போதுமானதாக இல்லை, சோம்பேறிகளாகவும், உடற்பயிற்சியும், நடைப்பயிற்சி இன்றியும் இருக்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் மேலான மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 168 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கில் ஒருபகுதி மக்கள் நாள்தோறும் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. இதனால், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் உருவாகக்கூடும். குறிப்பாக இதய நோய், நீரழிவு நோய், உடல்பருமன், மனநிலை பாதிப்பு, வாழ்க்கைத் தரம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.DOWNLOAD PDF CLICK HERE-
இந்தியாவில் நடக்கும் BIMSTEC நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியை புறக்கணித்தது நேபாளம்.
வங்கக் கடலையொட்டி
அமைந்து உள்ள
இந்தியா, வங்கதேசம்,
பூடான், மியான்மர்,
நேபாளம், இலங்கை,
தாய்லாந்து ஆகிய
நாடுகள் பல்வேறு
தொழில் நுட்பம்,
பொருளாதார ஒத்துழைப்புக்காக
‘BIMSTEC’ என்ற அமைப்பை
உருவாக்கி உள்ளன.
இந்த அமைப்பின்
2 நாள் மாநாடு
நேபாள நாட்டின்
தலைநகரான காட்மாண்டுவில்
கடந்த மாதம்
நடைபெற்றது. இந்த
மாநாட்டில் பிரதமர்
மோடி உள்ளிட்ட
அனைத்து நாடுகளின்
தலைவர்களும் கலந்து
கொண்டனர். அப்போது,
இந்த அமைப்பில்
உள்ள நாடுகள்
ஆண்டுதோறும் கூட்டுப்
போர் பயிற்சி
நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்,
முதன்முறையாக மகாராஷ்டிரா
மாநிலத்தில் உள்ள
புனே நகரில்
செப்டம்பர் 10) தொடங்குகிறது. இந்நிலையில், இந்த
போர் பயிற்சியில்
பங்கேற்க வேண்டாம்
என தனது
நாட்டு ராணுவ
வீரர்களுக்கு நேபாள
பிரதமர் கே.பி.சர்மா ஒலி
செப்டம்பர் 8ஆம்
தேதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து,
கூட்டுப் போர்
பயிற்சியில் நேபாள
ராணுவத்தினர் பங்கேற்க
மாட்டார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது. -
சுவீடன் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்.
சுவீடன் நாட்டில்
பிரதமர் ஸ்டீபன்
லோப்வென் தலைமையிலான
சமூக ஜனநாயக
கட்சி, கிரீன்
கட்சி கூட்டணியின்
சிறுபான்மை ஆட்சி
நடக்கிறது. அங்கு
செப்டம்பர் 10-ந் தேதி நாடாளுமன்ற
தேர்தல் நடத்தப்படும்
என அறிவிக்கப்பட்டு
இருந்தது. இந்த
தேர்தலில் ஆளும்
சமூக ஜனநாயக
கட்சி, சுவீடன்
ஜனநாயக கட்சி,
மிதவாத கட்சி
இடையே முக்கிய
போட்டி உள்ளது.
அகதிகள் குடியேற்றப்பிரச்சினை
முக்கிய பிரச்சினையாக
பிரசாரத்தில் இடம்
பிடித்தது. இந்த
தேர்தலில் எந்தக்
கட்சிக்கும் பெரும்பான்மை
பலம் கிடைக்காது
என கருத்துக்கணிப்புகள்
கூறுகின்றன. சுவீடன்
நாட்டின் முன்னாள்
பிரதமர் - ஸ்டீபன் லோப்வென்.தேசிய நிகழ்வுகள் - .DOWNLOAD PDF CLICK HERE
யானைகள் பலியை தடுக்க ‘Plan Bee’: ரயில்வே அமைச்சர் தகவல்.
நாடு
முழுவதும்
வனம்
மற்றும்
மலைப்பகுதிகளுக்கு
அருகே
அமைக்கப்பட்டுள்ள
ரயில்வே
தண்டவாளங்களை,
அப்பகுதிகளில்
வசிக்கும்
யானை
கூட்டங்கள்
கடந்து
செல்ல
முயலும்
போது,
ரயில்களில்
அடிப்பட்டு
இறக்கின்றன. இந்நிலையில், ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் போது, அவை அடிப்பட்டு இறப்பதை தடுக்கும் விதமாக நவீன திட்டத்தை ரயில்வே அமல்படுத்த உள்ளது. யானைகளுக்கு தேனீக்கள் என்றால் பயம் என்பதால் ரயில்கள் வனப்பகுதியில் செல்லும்போது தேனீக்கள் போல சத்தத்தை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை தண்டவாளத்தின் அருகே இணைக்க உள்ளது. இத்திட்டத்திற்கு ‘பிளான் பீ’ (Plan
Bee )எனப்
பெயரிட்டுள்ளது.-
வீடு தேடி வரும் 40 விதமான அரசு சேவை டில்லியில் அமலாகிறது.
திருமண சான்றிதழ்,
ஓட்டுனர் உரிமம்,
குடிநீர் இணைப்பு
உட்பட, 40 விதமான அரசு சேவைகளை,
வீட்டுக்கே வந்து
வழங்கும் திட்டம்,
டில்லியில் அமலுக்கு
வருகிறது. இத்திட்டத்தின்படி,
ஓட்டுனர் உரிமம்
பெற விரும்பும்
நபர், அதற்கான,
உதவி மைய
தொலைபேசி எண்ணை
தொடர்பு கொண்டு,
விபரங்கள் தெரிவிக்க
வேண்டும்.அரசால்
நியமிக்கப்பட்ட, தனியார்
நிறுவன முகவர்,
வீடு தேடி
வருவார். அவர்
கேட்கும் ஆவணங்களை
சமர்ப்பித்தால், ஓட்டுனர்
உரிமம், வீடு
தேடி வரும்.
இதற்கான, வாகன
சோதனைக்காக, ஒரு
நாள் மட்டும்,
போக்குவரத்து அலுவலகத்துக்கு
செல்லவேண்டும். பிறப்பு
மற்றும் இறப்பு
சான்றிதழ், ஜாதி
சான்றிதழ், புதிய
குடிநீர் இணைப்பு,
ஓட்டுனர் உரிமம்,
ரேஷன் அட்டை,
திருமண சான்று
உட்பட, பல்வேறு
அரசு சேவைகளுக்கு
வழங்கப்பட உள்ளன. - DOWNLOAD PDF CLICK HERE
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை - கொல்கத்தா நகராட்சியின் புதிய திட்டம்.
அனைத்து மாணவர்களும்
கல்வி கற்க
வேண்டும் என்பதை
வலியுறுத்தி மாநில
அரசுகள் அவர்களுக்கு
தேவையான கல்வியை
இலவசமாக வழங்கி
வருகின்றன. மேலும்,
மாணவர்களுக்கு தேவைப்படும்
சீருடைகள், ஷூக்கள்
உள்ளிட்டவற்றை இலவசமாக
அளித்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு
வங்காள மாநிலத்தின்
கொல்கத்தா நகராட்சி
மாணவ, மாணவியருக்கு
இலவச குடை
மற்றும் ரெயின்கோட்
ஆகியவற்றை வழங்க
முடிவு செய்துள்ளது.
கோடைக்காலத்தில் வெயிலில்
இருந்து மாணவர்கள்
தப்பிக்கவும், மழைக்காலத்தில்
மாணவர்களின் வருகை
குறைவை தடுக்கும்
வகையிலும், ஏழை
மாணவர்கள் பயன்பெறும்
வகையிலும் இந்த
திட்டத்தை அறிவித்துள்ளதாக
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்.
சுதந்திர இந்தியாவின்
முதல் உள்துறை
மந்திரி சர்தார்
வல்லபாய் பட்டேல்.
இந்தியாவில் பிரிந்து
கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை
இணைத்து ஒன்றுபட்ட
இந்தியாவை நிர்மாணித்தவர்
என்ற வரலாற்றுச்
சிறப்பு அவருக்கு
உண்டு. குஜராத்
மாநிலத்தின் முதல்
மந்திரியாக நரேந்திர
மோடி பதவிவகித்த
போது சர்தார்
வல்லபாய் பட்டேலுக்கு
குஜராத் மாநிலம்,
நர்மதா மாவட்டத்தில்
182 மீட்டர் உயரத்தில்
உலகிலேயே மிகப்பெரிய
ஒரு சிலையை
உருவாக்க கடந்த
2013-ம் ஆண்டில்
தீர்மானிக்கப்பட்டது. 2,603 கோடி ரூபாய் செலவில்
இந்தச் சிலையை
அமைப்பதற்கான அடிக்கல்
நாட்டுவிழா குஜராத்
மாநில அந்நாள்
முதல் மந்திரி
நரேந்திர மோடியின்
தலைமையில் நடைபெற்றது.
இந்த சிலையை
பிரதமர் நரேந்திர
மோடி அக்டோபர
31ஆம் தேதி
திறந்து வைக்கிறார்.
கலாச்சாரம், வணிகம்
மற்றும் கல்வியாளர்களுக்கிடையேயான ஊடாடல்கள் போன்றவற்றில்
ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான
ஒப்பந்தத்தில் ஜப்பானும்
குஜராத்தும் கையெழுத்திட்டுள்ளன.- DOWNLOAD PDF CLICK HERE
துருக்கியில் உள்ள இஜ்மிர் நகரில் நடைபெற்ற “87வது இஜ்மீர் சர்வதேச வர்த்தக கண்காட்சியில்” இந்தியா சார்பில் “மூல இந்தியா” என்ற பெயரில் ஒரு மெகா வணிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த “மூல இந்தியா” துருக்கியிலும் ஏனைய அண்டை நாடுகளிலும் இந்தியாவின் ஏற்றுமதிகளை உயர்த்தவும் பயன்படும்.
நபார்டு வங்கியானது ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் மேற்கு வங்கத்தின் நீர்பாசனத் திட்டங்களுக்கும், வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் சுமார் 335 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.



0 Comments