08- SEPTEMBER - 2018 / CURRENT AFFAIRS 

*    ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில்ஜெபிஎன்ற புயல் மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் மிகக் கடுமையான புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜெபி(Typhoon Jebi) புயலுக்கு தென்கொரியா இந்த பெயரை வைத்துள்ளது. ஜெபி என்றால் கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்.

*    சிகாகோ உலக இந்து சமய மாநாடு. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுஇந்நிலையில், சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

DOWNOLOAD LINK : CLICK HERE